புற்றுநோயை கட்டுப்படுத்தும் கல வகை

gplus

பல காலமாக, ஒரு தனிக்கல அங்கியொன்று Multicellular Life விருத்தியடைவதற்கு பல பரம்பரையலகுகள் (gene) பொறுப்பாகின்றன என உயிரியளாளர்களால் நம்பப்பட்டது.

ஆனால் அண்மையில் கன்சாஸ் ஸ்டேட் பல்கலைக்கழக உயிரியளாளர்களால் குறித்தவொரு பரம்பரையலகே Multicellular Life முறைக்கு பொறுப்பாகின்றது என்றும், இப் பரம்பரையலகு எல்லா Multicellular Life அங்கிகளுக்கும் பொதுவானது எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இக் குறித்த பரம்பரையலகு retinoblastoma (RB) என இனங்காணப்பட்டுள்ளது. இப் பரம்பரையலகே புற்றுநோய் தாக்கக்தையும் கட்டுப்படுத்துகிறது, அதாவது இப் பரம்பரையலகில் பாதிப்புக்கள் ஏற்படுமிடத்தே ஒருவர் புற்றுநோய்த் தாக்கத்திற்குஆளாகிறார் என தெருவிக்கப்படுகிறது.

DNA இரட்டிப்பு ஆரம்பிக்கும் முன் கல வட்டத்தை சீராக்கி, கலப்பிரிவில் இவ் RB பரம்பரையலகு முக்கிய பங்களிக்கிறது. இப் பரம்பரையலகு செயற்பாடற்றுப்போகுமிடத்து கல வட்டத்தை அதனால் கட்டுப்படுத்த முடியாமல் போகிறது.

இதனால்தேவையற்ற கலங்கள் உருவாகி புற்றுநோய்க்குகாரணமாகின்றது என அவ் ஆய்வாளர்கள்கூறுகின்றனர்.

பொதுவாகதாவர, விலங்கு மற்றும் சிலவகைஅல்காக்கள் பல்கல வாழிகளாகும். இவ்வினங்கள்ஒன்றுக்கொன்று வேறுபட்டவையானாலும், அவ்வினங்களிடையே குறித்த RB பரம்பரையலகு பங்கிடப்பட்டிருப்பது ஆச்சர்யமான ஒன்றுதான்