தன்னை ஏமாற்றும் கணவனுடன் உடலுறவில் ஈடுபடுவது குறித்து, 5 பெண்கள் கூறிய கருத்துகள்!

gplus

கள்ளத்தொடர்பு என்பது ஓர் கணவன் உளவியல் ரீதியாக தனது மனைவிக்கு அதிகபட்சமான வலியை தரும் செயலாகும். அதிலும், தன் கணவன் தன்னை ஏமாற்றுகிறான் என அறிந்த பிறகும் அவனுடம் ஒரே அறையில் வாழ்வது, தாம்பத்தியத்தில் ஈடுபடுவது எல்லாம் கருட புராண தண்டனைகளை விட கொடுமையானது.

உலகளவில் மனித சமூகத்தில் பெண்கள் தவறு செய்தால் ஒரு பார்வையும், ஆண்கள் தவறு செய்தால் ஒரு பார்வையும் நிலவி வருகிறது. இதில் முதலில் மாற்றம் வர வேண்டும். முக்கியமாக இல்லறத்தில், தாம்பத்தியத்தில். இதையும் படிங்க:

ஆட்டோகிராப், பிரேமம் போன்ற கதையம்சம் கொண்டு ஓர் பெண் மூன்று, நான்கு காதலை கடந்து வந்தால் அந்த படத்திற்கு "எ" சர்ட்டிபிகேட் அளித்திருப்போம். அந்த நடிகைகளை தூற்றி இகழ்ந்து தள்ளியிருப்போம்.

இது தான் உண்மை! இனி, தன்னை ஏமாற்றும் கணவனுடன் உடலுறவில் ஈடுபடுவது குறித்து, 5 பெண்கள் கூறிய கருத்துகள் பற்றிக் காணலாம்...

கருத்து #1

கணவர் என்னை ஏமாற்றுவதை அறியும் முன்னர் நாங்கள் இருவரும் வாரத்தில் பலமுறை உடலுறவில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்திருந்தோம். அதில் ஓர் ஆர்வமும் இருந்தது. ஆனால், அவர் என்னை ஏமாற்றுவதை நான் அறிந்த பிறகு அது மிகவும் வலி மிகுந்ததாக உணர துவங்கினேன். மூன்று மாதம் பிரிந்திருந்து.

மீண்டும் நாங்கள் இணைந்தோம். மீண்டும் உறவில் இணைந்த பிறகும் உறவில் ஈடுபட சிறிது நேரம் எடுத்துக் கொண்டோம். ஆயினும் அந்த ஏமாற்றிய உணர்வு இன்னமும் மனதைவிட்டு அகலவில்லை. முன்பிருந்த அந்த ஆர்வம் இப்போதில்லை. மீண்டும் வரவே வராது என்று தான் தோன்றுகிறது.

கருத்து #2

என் கணவர் வேறு பெண்ணுடன் உறவில் இருந்துள்ளார் என்பதை அறிந்த பிறகு அவரை மன்னிக்கலாம் என்ற எண்ணம் இருந்தது. ஆயினும், உறவில் ஈடுபடும் போதெல்லாம் அவர் வேறு பெண்ணுடன் இருந்தது தான் எண்ணத்தில் தோன்றும்.

என் கணவரின் ஆணுறுப்பை அசுத்தமானதாக உணர துவங்கினேன். உடலுறவு மட்டுமின்றி அது சார்ந்த எந்த செயலிலும் ஈடுபட மனம் ஒப்பவில்லை. இதுமட்டுமின்றி, என் கணவர் கூறும் விஷயங்களை நம்பவும் மனம் முன்வரவில்லை. இந்த எண்ணம் என்னைவிட்டு விலகவே இல்லை. மன ரீதியாக கூட அவர் என்னை நெருங்க நான் விரும்பவில்லை.

கருத்து #3

எங்கள் தாம்பத்திய வாழ்க்கை மிகவும் சிறந்து விளங்கியது. நாங்கள் எப்போதும் புதுமையாக கையாள எண்ணுவோம். என் கணவர் என்னை ஏமாற்றிவிட்டார் என அறிந்த பிறகு அவரை இழப்பதே சரிதான். பிரிந்து சென்றுவிடலாம் என்ற எண்ணம் வந்துவிட்டது.

ஆனால், தவறு அனைவரும் தான் செய்கிறார்கள் என்று எண்ணினேன். அவர், ஏமாற்றியதை அறிந்த பிறகு முதல் முறை உடலுறவில் ஈடுபடும் போது மிகவும் அசௌகரியமாக உணர்ந்தேன். என்னையே ஏமாற்றிக் கொண்டு பழையதை மறக்க நினைத்தாலும். அவர் என்னை ஏமாற்றிய எண்ணம் மனதை விட்டு ஆகவில்லை. பழைய நிலையில் உறவில் ஈடுபட முடியவில்லை.

கருத்து #4

என் கணவர் என்னை 25 ஆண்டுகளாக ஏமாற்றி வந்ததை அறிந்த போது கூனிக்குறுகி போனேன். இதை அறிந்த முதல் நொடியே அவருடன் உறவில் ஈடுபட கூடாது என்ற எண்ணம் தான் வந்தது.

முத்தமிட்டுக் கொள்வதை கூட மறுத்து வந்தேன். முத்தமிட அனுமதித்தால் கூட என் நெஞ்சம் காயமடையும். கணவருடன் உடலுறவில் இணைய சுத்தமாக விருப்பமில்லை. அவரை நெருங்குவதே அருவருப்பாக தான் இருந்தது.

கருத்து #5

இன்ஸ்டாகிராம் மூலமாக தான் வேறு பெண்ணுடன் என் துணை பழக்கத்தில் உள்ளார் என்பது தெரியவந்தது. இதை அறிந்த முதல் ஒரு மாதம் அவனுடன் உறங்குவதையே தவிர்த்து வந்தேன். அடிக்கடி அழுகை வரும். ஏமாற்றியதை அறிந்த ஓரிரு வாரத்தில் பிரிந்துவிட்டோம்.

அழுதுக் கொண்டே இருப்பது என்னை மட்டுமே காயப்படுத்தியது. பிறகு அவனை மறக்க ஆரம்பித்தேன். சுத்தமாக அக்கறை கூட எடுத்துக் கொள்ளவில்லை. என் அழுகைக்கு அவன் உகந்தவன் இல்லை என்பதை உணர்தேன்.