பிரதமர் மோடி புகழாஞ்சலி -அப்துல் கலாம் மறைவால் உருவான வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது

gplus

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் முதல் நினைவுநாளான இன்று அவரது சொந்த ஊரில் உள்ள நினைவிடத்தில் மத்திய மந்திரி வெங்கய்யா நாயுடு அப்துல் கலாமின் வெண்கலச் சிலையை திறந்து வைத்தார். கலாம் அருங்காட்சியகத்தை மத்திய மந்திரி பொன் ராதா கிருஷ்ணன் திறந்து வைத்தார். நினைவு மண்டபத்துக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மறைவால் உருவான வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது என பிரதமர் அவரது முதல் நினைவுநாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுதொடர்பாக, தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், நமது அன்புக்குரிய டாக்டர் அப்துல் கலாம் நம்மை எல்லாம் பிரிந்து, ஒரு நிரப்ப முடியாத வெற்றிடத்தை உருவாக்கிச் சென்று இன்றுடன் ஓராண்டு ஆகிறது. அந்த மிக உயர்வான தலைவருக்கு எனது அஞ்சலிகள் என குறிப்பிட்டுள்ளார்.