அதிரடி ஆட்டக்காரர் விராட் கோஹ்லியின் பெயர் பாரத ரத்னா விருதுக்கு பரிந்துரை.

gplus

தனது அதிரடி ஆட்டத்தால் கலக்கி வரும் விராட் கோஹ்லியின் பெயர் பாரத ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது கடந்த 2014 ஆம் ஆண்டு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், தனது ஆக்ரோஷமான ஆட்டத்தால் ரசிகர்களை கவர்ந்து வரும் கோஹ்லியை, அடுத்த சச்சின் டெண்டுல்கர் என ரசிர்கள் புகழ்ந்து வருகிறார்கள்.

இதற்கிடையில், அகில இந்திய கூட்டமைப்பு (ஏஜிஜிஎப்), மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம், கோஹ்லிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

அதிரடி ஆட்டக்காரராக விளங்கும் கோஹ்லி எதிர்காலத்தில் சச்சினின் சாதனைகளை முறியடிப்பார் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

எனவே அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கோரியுள்ளோம் என கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.